Tamiltoken
2 min readSep 5, 2021

தமிழ் மெய் நிகர் நாணய சேமிப்பான்கள் (Tamil Crypto Wallets)

பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் முக்கிய பகுதியாக மெய் நிகர் நாணய சேமிப்பான்கள் மாறிவிட்டன. அவைகள் ஒரு நடைமுறை பயன்பாட்டைக் கொண்டுள்ளன.

சேமிப்பான்கள் “வாலட்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, எத்தனை வகையான சேமிப்பான்கள் உள்ளன என்று உங்களுக்கு இன்னும் தெரியாவிட்டால்,உங்கள் சந்தேகங்களை நாங்கள் இந்த பதிவின் மூலமாக சாமானியர்களுக்கும் புரியும் வகையில் விளக்கமளிக போகிறேன்.

Crypto Wallet (மெய்நிகர் நாணய பணப்பை) பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இதில் மெய்நிகர் நாணயங்கள் சேமிக்கப்படுகின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது உங்கள் மெய் நிகர் நாணயங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் டிஜிட்டல் மென்பொருளைக் கொண்டுள்ளது. இது அவற்றை சேமித்து வைப்பது மட்டுமல்லாமல், அவற்றை அனுப்பவும், பெறவும் அனுமதிக்கிறது.

சேமிப்பான்கள் 2 வகைப்படும்

  1. cold wallets
    a) Hardware Wallet (வன்தட்டு தொழினுட்ப சேமிப்பான்கள்)
    b) Paper Wallet (காகித சேமிப்பான்கள்)

2. hot wallets (உடனடி பயன்பாட்டு சேமிப்பான்கள்)
அ) Online Wallet

This type of wallet is part of the group that needs an Internet connection. In fact, their name indicates that they need to be online. It’s a wallet that saves your private key using a server that is provided and controlled by a company.

இந்த வகை சேமிப்பான்கள்ளுக்கு இணைய இணைப்பு அவசியம். இது ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படும் வழங்கல் கணணியில் உங்கள் சேமிப்பான்களின் இரகசிய குறியீடு பாதுகாக்கப் பட்டிருக்கும்.

ஆ) Mobile Wallet (திறன்பேசி சேமிப்பான்களின் )

நீங்கள் திறன்பேசி மூலமாக பரிவர்த்தனைகளைச் செய்யப் போகிறீர்கள் என்றால் இந்த வகையான சேமிப்பான்களின் இன்றியமையாது. இணைய இணைப்பு தேவை மற்றும் மற்றொரு வகை சேமிப்பான்களை போலவே கிரிப்டோகரன்ஸிகளை அனுப்ப அல்லது பெற உங்களை அனுமதிக்கிறது.

இ) Desktop Wallet (மேசை கணினி சேமிப்பான்கள்)

இவை உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் இருந்து நிறுவப்பட்டு பயன்படுத்தப்படும் சேமிப்பான்கள். உங்கள் (Private keys) சேமிப்பான்களின் இரகசிய குறியீட்டை சேமிக்க வன்தட்டை பயன்படுத்தும்.

சிறிய அளவு கிரிப்டோகரன்ஸிகளை வர்த்தகம் செய்யும் அல்லது பரிமாற்றம் செய்யும் நபர்களுக்கு இந்த சேமிப்பான் வகை பரிந்துரைக்கப்படுகின்றன.

மெய் நிகர் நாணய சேமிப்பான்கள் மற்றும் வங்கி கணக்குகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஒரு சேமிப்பானில் உங்கள் கிரிப்டோகரன்ஸிகளின் முழு கட்டுப்பாட்டை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள், அதேசமயம் வங்கிகளில் அப்படி இல்லை.

அதாவது நீங்கள் தேவையான போது உங்கள் சேமிப்பானிலுள்ள எவளவு மெய் நிகர் நாணயத்தையும் வரையறை இன்றி பயன்படுத்தலாம். வங்கி கணக்குகளில் அப்படியில்லை கட்டுபாடுகளும் விதிமுறைகளும் உண்டு.

சேமிப்பான்களின் கட்டமைப்பு

சேமிப்பான் உருவாக்கம் மிகவும் எளிதானது.

சேமிப்பாங்கள் இரு பாகங்களை கொண்டுள்ளன.

  • Private key (தனிப்பட்ட விசை குறியீடு):

இது இலக்கங்கள் அல்லது இரகசிய கடவுச்சொல்லைக் கொண்டுள்ளது, அதை நீங்கள் யாருடனும் பகிரக்கூடாது.
ஏன்?
ஏனென்றால் நீங்கள் அவ்வாறு செய்தால், உங்கள் கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்த வேண்டிய தனித்துவமான மற்றும் ரகசிய அணுகலை அந்த நபருடன் நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள், மேலும் அந்த நபர் உங்கள் சேமிப்பான்களின் முழு கட்டுப்பாட்டையும் பெறுவார், மேலும் அவர்கள் விரும்பியபடி அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இதை நீங்கள் இழந்தால் , உங்கள் சேமிப்பானிலுள்ள

மெய்நிகர் நாணயம் அனைத்தையும் இழந்து விடுவீர்கள்.

  • Public key (சேமிப்பான் முகவரி):

நாம் இதை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் இது கிரிப்டோகரன்ஸிகளைப் பெற அனுமதிக்கிறது. இது இரகசியமானது அல்ல, மற்றவர்கள் அவர்களை அறிய முடியும்.

நீங்கள் மற்றொருவரிடமிருந்து மெய் நிகர் நாணயங்களை பெற விரும்பினால், இந்த இலக்கத்தை நீங்கல் அவர்கலுடன் பகிர வேண்டும்.

பெரும்பாலும் இதை தான்சேமிப்பான் முகவரி என்று ,அழைக்கப் படுகிறது (wallet address)

Tamiltoken
Tamiltoken

Written by Tamiltoken

First language based block chain technology dedicated for the preservation, development and love of the world’s oldest living classical language.

No responses yet