Tamil Crypto ஓர் அறிமுகம்

Tamiltoken
4 min readAug 29, 2021

--

உலக தமிழ் சொந்தங்களே , தமிழ் மொழி ஆர்வலர்களே

Tamil Crypto (தமிழ் ) என்பது பேரேடு (Blockchain) தொழினுட்பத்தின் மேல் உருவாக்கப் பட்ட ஒரு செயட்திட்டமாகும்.

இந்த செயட்திட்டம் மூலமாக தமிழ் மொழி அதன் வளர்சிக்கு Blockchain தொழினுட்பம் பயன்படுத்தும் முதல் மொழி என்ற அங்கீகாரம் பெறும்.

தமிழ் மின் நாணய செயல் திட்டம் உலகத்தமிழர்கள் அனைவரையும் உள்வாங்கி பங்குதாரர் ஆக்கி தமிழ் மொழி விருத்திக்கு அனைவரினதும் பங்களிப்பை பல்வேறு செயல்திட்டங்கல் மூலம் சாத்தியப்படுத்தும் ஒரு கூட்டு முயற்சி.

Tamil Crypto முக்கிய செயட்திட்டம் (தமிழ் தகவல் பரவலாக்கம்)

தகவல் பரவலாக்கம் என்றால் என்ன ?
(What is data decentralization?)

மின்மயப்படுத்தப் பட்ட தகவல்கலை தனி நபரின் கணனியிலோ அல்லது அமைப்புகளின் கனனியிலோ வைக்காமல், தமிழ் மொழி ஆர்வலர் அனைவரும் ஒரு பிரதியை பதிவேற்றி வைக்கக்கூடிய தொழினுட்பம் மூலமாக தகல் சேமிப்பை பரவலாக்குதல்.

உதாரணத்துக்கு , ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதோடு, அதில் இருந்த எத்தனையோ லட்சம் அரிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இது எமது இனத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத பேரிழப்பாகும்.

இதை எவ்வாறு தடுத்திருக்கலாம்?

அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்ததே இதற்கு முதல் காரணம் , மின்னணு மையப்படுத்தி வேறிடத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் ஓரளவு பாதுகாத்து இருக்கலாம்.

சரி இப்பொழுது தான் மின் நூல்கள்,மின் மையப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றனவே , ஆம் இருக்கின்றன ஆனால் , இப்பொழுதும் தகவல் எல்லாம் , ஒரு அமைப்பின் வழங்கல் கணினியிலோ அல்லது , தனிநபர்களின் கணனியிலோதான் , பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.பதிவேற்றப்பட்ட வழங்கல் கணனி (Server ) தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தாலோ அல்லது, பதிவேற்றப்பட்ட தகவல்கள் திட்டமிட்டு அழிக்கப் பட்டாலோ அல்லது , மூலப்பிரதி மாற்றப்பட்டுப் போகவோ வாய்ப்பு இருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் , தகவல் மையப்படுத்தப்படுவதே (ஒரே இடத்தில் குவிக்கப்படுவதே ).

இன்னும் நாம் தமிழ் ஓலைச்சுவடி திருட்டு என்று தினமும் கேள்வி பட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். இதைத் தடுக்க என்னவழி? ஒரே வழி தகவல் பரவலாக்கம்.

கட்டச்சங்கிலி தொழினுட்பம் மூலமாக நாம் தகவலை பரவலாக்கி (தமிழ் மின் ஆவணங்கள் , இந்த செயல்திட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களின் கனனியில் பதிவேற்றப்பட்டுப் பாதுகாக்கப்படும்) இந்த இழப்புகளை தவிர்க்கலாம். எமது Tamil Crypto செயல் திட்டம் இதை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது.

ஒரு மொழிக்காக ஏன் இவ்வளவு சிரமப்பாடு?

மொழியின் நீட்சியே இனத்தின் நீட்சியாகும். ஒரு மொழி அழிவடையும் போது இனம் அதன் அடையாளத்தை இழக்கின்றது. மற்றும் மற்றைய மொழிகள் போலல்லாது. எமது அன்னைத்தமிழ் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.இது உங்களுக்கு தெரிந்து இருப்பினினும்.மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகின்றோம் .

செம்மொழிக்குரிய பதினொரு தகுதிகள்

1.தொன்மை
2.பிறமொழித் தாக்கமின்மை
3.தாய்மை
4.தனித்தன்மை
5.இலக்கிய வளம் இலக்கணச் சிறப்பு
6.பொதுமைப் பண்பு
7.நடுவு நிலைமை
8.பண்பாட்டு கலை பட்டறிவு வெளிப்பாடு
9.உயர் சிந்தனை
10.கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11.மொழிக் கோட்பாடு

இலக்கிய செவ்வியல் தன்மைகள்

1.தொன்மை
2.முன்மை
3.எளிமை
4.ஒளிமை
5.இளமை
6.வளமை
7.தாய்மை
8.தூய்மை
9.செம்மை
10.மும்மை
11.இனிமை
12.தனிமை
13.பெருமை
14.திருமை
15.இயன்மை
16.வியன்மை

என்று 16 தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது.

இந்த 16 சிறப்பம்சங்களின் விரிவாக்கத்தை கீழுள்ள இணைப்பில் காணலாம். https://thamizhvizhi.blogspot.com/2016/01/blog-post.html

தீ, கடல் , எதிரிகள் துரோகிகள் அழித்தது போக இன்னும் மிச்சம் இருக்கும் எமது இனத்தின் சொத்துக்களை கணனிமயப்படுத்தி, தகவலை பரவலாக்கி அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே எமது நோக்கம்.

மொழி வாழ்ந்தால் தான் இனம் வாழும்.

நமது மொழிக் கடன்

நமது மொழி காலம் காலமாக தனது தனித்தன்மையாலும் பலரது தியாகத்தாலும் தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு மின்னியல் (Digital) உலகிலும் முன்னணி மொழியாக வலம் வருகின்றது.

இந்த தன்னிகரில்லாத தமிழ் மொழி வளர்ச்சிக்கு நாம் என்ன செய்து இருக்கின்றோம் என்ற கேள்வி எல்லா தமிழர்களிடத்திலும் வர வேண்டும்,

இதுவே எமது மொழியை அடுத்த தலைமுறைக்கு வீரியத்துடன் எடுத்துச் செல்ல உதவும். மின்னிலக்க தளத்தில்,பேரேடு (Blockchain ) தொழில்நுட்பத்தின் ஊடாக இதை நாங்கள் ஒவ்வொருவரும் சாதிக்க முடியும். இதற்காகத்தான் Tamil Crypo இயங்குதளம் உருவாக்கப்பட்டது.

இந்த செயல்திட்டத்தில் நீங்கள் எப்படி பங்குபெறுவது.

நீங்கள் https://app.TamilCrypto.org இல் கணக்கு திறந்து. செயட்திட்டங்கலை பார்வையிடலாம் மற்றும் பங்கேற்கலாம்.

Method 1:

நீங்கள் தமிழ் தகவல் பரவலாக்கச் செயல்திட்டத்தில் (Decentralization of Tamil Digital Assets) இணைந்து , தமிழ் ஆவணக்கங்களை பதிவேற்றம் மற்றும் சரிபார்த்தல் மற்றும் பாதுகாத்தல் போன்ற பணிகளைச் செய்யும் பொது உங்கள் தமிழ் Crypto Wallet க்கு தமிழ் Crypto இலவசமாக அனுப்பப் படும்.

Method 2:

Tamil Crypto எப்படி வாங்குவது (using Fiat)

https://stellarterm.com அல்லது https://interstellar.exchange போன்ற Crypto சந்தைகளில் வாங்கலாம்.

Tamil Crypto வாங்கும் முறை

Interstellar exchange => https://tamiltoken.org/tamiltoken-purchase-steps-interstellar-exchange.pdf

Stellarterm exchange =>

https://tamiltoken.org/tamiltoken-purchase-steps-stellarterm-exchange.pdf

தமிழ் Crypto வை மற்ற கிரிப்டோ Currency மாதிரி வெறுமனே விற்றல் வாங்கலுக்கு மட்டும் லாப நோக்கில் பயன்படுத்தாமல் , தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சார்ந்த செயல்திட்டங்களை பயன் படுத்துவது தான் முதன்மை நோக்கம்.

இதன் பெறுமதி எற்றமும் , இறக்கமும் இந்த வலையமைப்பு சார்ந்து இயக்கும் செயல் திட்டங்களுக்கு உலக தமிழர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவு நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளது.

செயல்திட்ட நிர்வாகம் (Tamil Crypto Governance)

Tamil Token வைத்திருப்பவர்கள், வாக்கு செலுத்தும் தகுதி பெறுவார்கள். ஒரு செயல் திட்டம் ஆரம்பிக்கும் பொது நீங்கள் Tamil Crypto மூலமாக ஆதரவு செலுத்தலாம் மற்றும் நீங்கள் குறைந்தது 10 TAMIL Crypto வைத்திருந்தால் நீங்கள் சமூக செயட்திட்டங்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவீர்கள்.

— — — — — — -

“விழியின்றேல் ஒளியில்லை
மொழியின்றேல் இனமில்லை
அழியாமல் மொழிதன்னைக் காப்போம் — நாம்
அன்றாடம் தமிழ்பேசி ஆர்ப்போம்!”

பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்…

பல மொழிகளைக் கற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்…” எனப் பாடினார். மற்ற மொழிகளைக் கற்கும் போது தான், தமிழ் மொழியின் சிறப்புகளை, நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.

#tamiltoken #tamilCrypto #tamilcoin #blockchain #tamillanguage

தொடர்புகளுக்கு

Join our telegram group for updates https://t.me/tamiltoken

Twitter : https://twitter.com/tamiltoken

Email: Support[@]TamilCrypto.org

--

--

Tamiltoken
Tamiltoken

Written by Tamiltoken

First language based block chain technology dedicated for the preservation, development and love of the world’s oldest living classical language.

No responses yet